புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (09:16 IST)

காங்கிரஸிலிருந்து முக்கிய தலைவர் விலகல் – அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

மகிளா காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுஷ்மிதா தேவ் கட்சியிலிருந்து விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் சுஷ்மிதா தேவ். பிறகு காங்கிரஸின் பெண்கள் அணியான மகிளா காங்கிரஸின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் காங்கிரஸின் முக்கிய தலைவரும், ராகுல்காந்தியின் நெருங்கிய வட்டாரத்தை சேர்ந்தவருமான இவர் கட்சியிலிருந்து விலகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சுஷ்மிதா தற்போது அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.