திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (17:26 IST)

’அம்பேத்கரும்.. மோடியும்’ புத்தகம் வெளியீடு...! பங்கேற்காத இளையராஜா?

Modi Book
இன்று ‘அம்பேத்கரும் மோடியும்’ புத்தகம் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தால் வெளியிடப்பட்டுள்ளது.

ப்ளு கிராப்ட் டிஜிட்டல் பவுண்டேசன் என்ற நிறுவனத்தின் சார்பில் பிரதமர் மோடியின் செயல்பாடுகளை, அம்பேத்கரின் சிந்தனையோடு ஒப்பிட்டு “அம்பேத்கரும், மோடியும்: சீர்திருத்தவாதிகளின் சிந்தனையும், செயல்வீரர்களின் நடவடிக்கையும்” என்ற ஆங்கில புத்தகம் எழுதப்பட்டது.

இந்த புத்தகத்திற்கு இசையமைப்பாளரும், மாநிலங்களவை எம்.பியுமான இளையராஜா அணிந்துரை எழுதியிருக்கிறார். சமீபத்தில் இந்த அணிந்துரை குறித்து விமர்சனங்களும் எழுந்தன. இந்நிலையில் இன்று இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர், எல்.முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட நிலையில் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்த புத்தகத்தை வெளியிட்டார். இந்த நிகழ்வில் இளையராஜா கலந்து கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.