திங்கள், 7 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 26 ஏப்ரல் 2014 (15:30 IST)

தேர்தலுக்கு பிறகும் மோடிக்கு ஆதரவு கிடையாது - மம்தா பானர்ஜி உறுதி!

பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காதபட்சத்தில், தேர்தலுக்கு பிறகும் மோடியை ஆதரிக்க மாட்டேன் என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தனி பெரும்பான்மை கிடைக்காவிட்டால் மாநில கட்சிகளின் ஆதரவை பெற வேண்டிய நிலை பாஜகவுக்கு ஏற்படும். தேர்தலுக்கு பிறகு மம்தா பானர்ஜியின் ஆதரவை பெற பாஜக முயற்சி மேற்கொள்ளலாம் என்று கருதப்படுகிறது.
 
இதற்கிடையே தேர்தலுக்கு பிறகும் மோடியை ஆதரிக்க மாட்டேன் என்று மேற்கு வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
 
2016 ஆம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. 27 சதவீதம் சிறுபான்மையினரின் வாக்குகள் மேற்கு வங்காளத்தில் இருக்கிறது. மோடியை ஆதரித்தால் சிறுபான்மையினரின் வாக்குகள் பறிபோய்விடும் என்று மம்தா கருதுகிறார். இதன் காரணமாகவே அவர் மோடியுடன் கைகோர்க்க விரும்பவில்லை.
 
வருகிற 27 ஆம் தேதி மற்றும் மே 4 ஆம் தேதி மேற்கு வங்காளத்தில் நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மம்தா பானர்ஜி, மோடியை கடுமையாக தாக்கி பேசுவார் என்று தெரிகிறது.
 
அதே நேரத்தில் மோடி அலை வீசுவதால் மேற்கு வங்காளத்தில் பாஜகவுக்கு கூடுதல் இடம் கிடைக்கும் என்று பாஜக தொண்டர்கள் கருதுகிறார்கள்.