செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : ஞாயிறு, 8 செப்டம்பர் 2024 (12:01 IST)

வந்தே பாரத் ரயிலை நான்தான் ஓட்டுவேன்! சட்டையை கிழித்துக் கொண்டு புரண்ட லோகோ பைலட்கள்! - வைரல் வீடியோ!

Vandhe Bharat

வந்தே பாரத் ரயிலை யார் ஓட்டுவது என்று லோகோ பைலட்கள் இடையே எழுந்த மோதலில் சட்டையை கிழித்துக் கொண்டு புரண்ட வீடியோ வைரலாகி வருகிறது.

 

 

இந்தியா முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் இந்திய ரயில்வேயின் புதிய அதிவேக வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் பல்வேறு புதிய வழித்தடங்களிலும் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் முதல் உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா வரை புதிய வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டது.

 

இந்த ரயிலை இயக்க மேற்கு மத்திய ரயில்வே, வடமேற்கு ரயில்வே மற்றும் வடக்கு ரயில்வே ஆகிய மூன்று டிவிஷன்களில் இருந்தும் லோகோ பைலட்களுக்கு உத்தரவு வந்ததால் எந்த டிவிசனின் லோகோ பைலட் ரயிலை இயக்குவது என்பதில் ஆரம்பமே மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை ரயிலை இயக்குவதும் மூன்று டிவிஷன் லோகோ பைலட்களுக்குள் சண்டை ஏற்பட்ட நிலையில் ரயில் இயக்க அறைக்குள் புக அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

 

இதில் ரயில் கதவின் கண்ணாடி ஜன்னல் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன். மேலும் லோகோ பைலட்டுகள் ஒருவரை ஒருவர் சட்டையை கிழித்து சண்டை போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth,.K