திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 27 ஜூலை 2023 (12:00 IST)

ராஜஸ்தான் வரும் பிரதமர் மோடியை வரவேற்க மாட்டேன்.. முதல்வர் அசோக் கெலாட் அதிரடி அறிவிப்பு..!

ashok gehlot
இன்று ராஜஸ்தான் மாநிலத்திற்கு பிரதமர் மோடி வருகை தர இருக்கும் நிலையில் அவரை வரவேற்க மாட்டேன் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இன்று ராஜஸ்தானில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டை பிரதமர் மோடி ராஜஸ்தான் வரவுள்ளார். இந்த நிலையில் எந்த மாநிலத்திற்கு பிரதமர் வந்தாலும் அம் மாநில முதல்வர் அவரை வரவேற்பது வழக்கமாக உள்ளது 
 
தமிழகத்திற்கு பிரதமர் வருகை தரும்போது கூட முதல்வர் மு க ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில்  ராஜஸ்தான் வரும் பிரதமர் மோடியை வரவேற்க முடியாது என்றும்,  பிரதமர் அலுவலகம் தன்னுடைய மூன்று நிமிட உரையை நிகழ்ச்சியிலிருந்து நீக்கி உள்ளதாகவும் அதனால் வரவேற்க முடியாது என்ற முடிவை தான் எடுத்திருப்பதாகவும் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
 
 ஆனால் அதே நேரத்தில் உங்களுக்கு எனது மனப்பூர்வமான வரவேற்பை டுவிட்டர் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
 
Edited by Siva