1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Modified: செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (07:43 IST)

கொடுத்த ஆக்சிஜனை நோயாளியிடம் திருப்பி கேட்ட மருத்துவமனை!

கொரோனா நோயாளி ஒருவருக்கு ஆக்சிஜன் செலுத்தி அவரது உயிரை காப்பாற்றிய நிலையில் அந்த ஆக்சிஜனை இயற்கைக்கு திருப்பி கொடுத்து விடுங்கள் என அந்த நோயாளிக்கு மருத்துவமனை நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது 
 
நாக்பூரில் கொரோனா நோயாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சுமார் ஒன்றரை லட்சம் லிட்டர் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. இதனை அடுத்து அவர் குணமாகிய நிலையில் அந்த நோயாளியிடம் மருத்துவமனை நிர்வாகம் வேண்டுகோள் ஒன்றை விடுத்தது. உங்களுக்கு செலுத்தப்பட்ட ஒன்றரை லட்சம் ஆக்சிஜனை நீங்கள் திருப்பி இயற்கைக்கு செலுத்தி விடுங்கள் என்றும் அதற்கு குறைந்தது பத்து மரங்கள் நட்டு அதன் மூலம் ஆக்சிஜனை நீங்கள் இயற்கை திருப்பி செலுத்த விடலாம் என்றும் கூறியுள்ளது 
 
மருத்துவமனை நிர்வாகத்தின் இந்த வேண்டுகோளை ஏற்று கண்டிப்பாக தான் 10 மரங்களுக்கும் அதிகமாக மரங்களை நட்டு இயற்கைக்கு என்னால் முடிந்த அளவு ஆக்சிஜனை திருப்பி செலுத்தி விடுவேன் என்று அவர் உறுதி கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது