’கொடுமை’ - செல்போன் திருடியதற்காக பெண் அடித்து கொலை
’கொடுமை’ - செல்போன் திருடியதற்காக பெண் அடித்து கொலை
உத்தரப் பிரதேச மாநிலம், கிரிதர் நகர் கிராமத்தை சேர்ந்த குஸ்மாதேவி (30) என்ற பெண் ஒருவருடைய செல்போனை திருடிவிட்டதாக கூறப்படுகிறது.
அதனால் அப்பகுதியைச் சேர்ந்த சங்க்ஜீவ், ராஜீவ், பாபுலோ ஆகியோர் குஸ்மாதேவி சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த குஸ்மாதேவி பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், குஸ்மாதேவியை தாக்கிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.