ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 1 மே 2020 (18:46 IST)

இந்தியா முழுவதும் மேலும் இரு வாரங்கள் ஊரடங்கு நீட்டிப்பு !மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு! #Breaking

மே 3 ஆம் தேதியோடு ஊரடங்கு முடிய இருந்த நிலையில் இப்போதும் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் இரண்டாவது ஊரடங்கை மே 3 ஆம் தேதி வரை நீட்டித்தார். அந்த ஊரடங்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 35,000 ஐ தாண்டியுள்ளது. நாளுக்கு நாள் புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையி ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மோடி மாநில முதல்வர்களுடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீடியோ கான்பரன்ஸிங்  மூலமாக ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் இன்று மே 3 ஆம் தேதிக்குப் பின்னரும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.