1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 4 ஆகஸ்ட் 2017 (14:29 IST)

தண்டவாளத்தில் பிணமாக கிடந்த இந்திய ஹாக்கி வீராங்கனை

அரியானா மாநிலத்தை சேர்ந்த சர்வதேச ஹாக்கி வீராங்கனை ஜோதி குப்தா ரெவாரி ரயில் நிலைய தண்டவாளத்தில் பிணமாக கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 

 
அரியானா மாநிலத்தை சேர்ந்த சர்வதேச ஹாக்கி வீராங்கனை ஜோதி குப்தா(20) இந்திய அணியில் முன்கள வீராங்கனையாக விளையாடி வந்தார். கடந்த 2ஆம் தேதி வீட்டில் பலகலைக்கழகத்திற்கு சென்று சான்றிதழில் பெயர் மாற்றம் செய்யப்போவதாக கூறி வீட்டில் இருந்து சென்றுள்ளார். 
 
அதன்பின் அவர் இரவு வீடு திரும்பவில்லை. இந்நிலையில் ரெவாரி ரயில் நிலைய தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். கடந்த புதன்கிழமை இரவு ரெவாரி ரயில் நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
 
இவர் 2016ஆம் ஆண்டு தென் ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்கள் இந்திய ஹாக்கி அணி விளையாடியுள்ளார். மேலும் இவரது மரணம் குறித்த காரணங்கள் எதுவும் வெளியாகவில்லை. உண்மையிலே அவர் தற்கொலைதான் செய்துக்கொண்டாரா? இல்லை கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.