ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 20 செப்டம்பர் 2024 (20:30 IST)

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

Tirupathi Laddu
திருப்பதி லட்டு தயாரிப்பதற்கு திண்டுக்கல்லில் உள்ள ஏ ஆர் டெய்ரி ஃபுட் (பி) லிட் நிறுவனம் தான் நெய் வழங்கி வருகிறது. இந்த நிலையில் ஏ ஆர் டெய்ரி ஃபுட் (பி) லிட் நிறுவனத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உதவி செயற்பொறியாளர் அனிதா ஆய்வு செய்தார். 
 
இதனைத் தொடர்ந்து பால் பொருட்கள் தயாரிப்பின் போது வெளியேறும் கழிவு நீர்களை ஆய்விற்காக எடுத்துச் செல்வதாகவும், ஆய்வுகள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்படும் எனவும் அதில் ஏதேனும் குறைகள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
 
 முன்னதாக லட்டு தயாரிக்க பயன்படுத்தபட்ட நெய்யை ஆய்வகத்துக்கு அனுப்பி, அங்கிருந்து கிடைக்க பெற்ற ஆய்வறிக்கையை தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்டது. அதில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், மாமிச கொழுப்பு ஆகியவை கலந்திருந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் பாமாயில் எண்ணெய் கலந்து இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.
 
Edited by Siva