புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : ஞாயிறு, 29 மார்ச் 2020 (10:58 IST)

’’அவரது ஆத்மா’’ சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் – கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்!!!

’’அவரது ஆத்மா’’ சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் – கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்!!!

நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது... அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என தெலுங்கான மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

விக்ரம் நடித்த ‘தூள்’ உள்பட ஒருசில படங்களில் நடித்தவரும் நாட்டுப்புற பாடகியுமான பரவை முனியம்மா இன்று மதுரையில் காலமானார். இவருக்கு வயது 83.

கடந்த சில மாதங்களாக உடல்நலக்கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த பரவை முனியம்மாவுக்கு திரையுலகினர் நிதியுதவி செய்ததால், சிறப்பான சிகிச்சை பெற்று உடல்நலம் தேறி வீடு திரும்பினார். இந்த நிலையில் இன்று திடீரென அவர் காலமானார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தூள், சண்டை, காதல் சடுகுடு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள இவர், 2000க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் கிராமப்புற பாடல்களை பாடி தன் பாடல் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். தமிழக அரசு இவரது கலைச் சேவையை பாராட்டி கலைமாமணி பட்டம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தெலுங்கான மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது;

’நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.நாட்டுப்புற பாடல்களால் தமிழ்நாட்டு மக்களை உற்சாகப்படுத்திய கிராமப்புற பாடகியின் குரல் ஓய்ந்தது.அவரது இழப்பு நாட்டுப்புற கலைக்கு பேரிழப்பு. அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.