வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 19 ஜூன் 2021 (16:18 IST)

HBD ராகுல்காந்தி...அரசியல் தலைவர்கள் வாழ்த்து

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி இன்று தனது 51 வது பிறந்தநாள் கொண்டாடுகிறார்.  அவருக்கு இந்தியாவில் உள்ள முக்கிய தலைவர்கள், அரசியல்பிரமுகர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேரு. இவரது  மகள் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி. இவரது மகன் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி. இவருக்கும் ஐமுகூட்டணியின் தலைவர் சோனியா காந்திக்கும் மகனாகப் பிறந்தவர் ராகுல்காந்தி. இவருக்கு பிரியங்கா காந்தி என்ற தங்கை உண்டு.

ராஜிவ் காந்தி தனது தந்தையின் மரணத்திற்குப் பின்னர், கடந்த 2004 ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் உள்ள அமேதி தொகுதியில் போட்டியிட்டார். பின்னர் 2007 ஆம் ஆண்டு அ,இ.காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் காங்கிரஸ் கட்சி கடும் தோல்வி அடைந்தது.எனவே அப்பொறுப்பை அவர் ராஜினாமா செய்தார். கேரளாவில் உள்ள வயநாடு தேர்தலில் போட்டியிட்டு எம்பியாக ராகுல் தேர்வு செய்யப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்.