திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 5 செப்டம்பர் 2019 (13:45 IST)

சிக்னலை தாண்டி சீறி வந்த ட்ராக்டர்: 59,000 ரூபாய் அபராதம்!?

ஹரியானா மாநிலத்தில் மது அருந்திவிட்டு ட்ராக்டர் ஓட்டி சென்ற ட்ரைவருக்கு போக்குவரத்து போலீஸார் 59 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் சிக்னலில் நிற்காமல் போக்குவரத்து விதிகளை மீறி ட்ராக்டர் ஒன்று வேகமாக சென்றிருக்கிறது. அதை மடக்கி பிடித்த போலீஸார் ட்ரைவரை விசாரித்திருக்கின்றனர். ஆனால் ட்ரைவர் நன்றாக மது அருந்தி போதையில் இருந்திருக்கிறார். மேலும் அவரிடம் ட்ராக்டருக்கான பதிவு சான்றிதழ், வாகன தகுதி சான்றிதழ், இன்சூரன்ஸ் எதுவும் இல்லை. அவர் ட்ரைவர் லைசென்ஸ் கூட வைத்திருக்கவில்லை.

மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியது, போக்குவரத்து விதிகளை மீறி வேகமாக வண்டி ஓட்டியது, ஓட்டுநர் உரிமம், இன்சூரன்ஸ், வாகன பதிவு மற்றும் தகுதி சான்றுகள் இல்லாதது ஆகிய குற்றங்களுக்காக அவருக்கு 59 ஆயிரம் ரூபாய் தண்டத்தொகை கட்டுமாறு கூறப்பட்டுள்ளது. அவரது ட்ராக்டரையும் போலீஸார் பறிமுதல் செய்து கொண்டுள்ளனர்.