காற்று மாசுபாடு; ஹரியானாவில் காலவரையின்றி பள்ளிகள் மூடல்!
டெல்லியை தொடர்ந்து ஹரியானாவிலும் காற்று மாசு அதிகரித்துள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக டெல்லி மற்றும் சுற்றுபுற பகுதிகளில் காற்று மாசுபாடு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்ததால் சமீபத்தில் டெல்லியில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மீண்டும் காற்று மாசுபாடு காரணமாக மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது அண்டை மாநிலமான அரியானாவிலும் காற்று மாசுபாடு தீவிர பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. ஹரியானாவின் குருகிராம், சோனிபட், ஃபரிதாபாத், ஜஜ்ஜார் ஆகிய மாவட்டங்களில் காற்றின் தரம் மோசமானதாக மாறியுள்ளது. இதனால் அம்மாவட்டங்க்ளில் உள்ள பள்ளிகளுக்கு காலவரையின்றி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.