வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 12 மே 2023 (17:14 IST)

பள்ளியில் சிறுமிக்கு பாலியல் சீண்டல்....ஊழியர் கைது

abuse
டெல்லியில் பள்ளிக்குச் சென்ற 4 வயது சிறுமியை பாலியன்  சீண்டல் செய்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

டெல்லி ரோஹினி பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் தன்  4 வயது மகளை கடந்த மே மாதம் அருகேயுள்ள ஒரு பள்ளியில் சேர்த்துள்ளார்.

கடந்த 9 ஆம் தேதி சிறுமி பள்ளியில் உள்ள மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு பியூனாக வேலைபார்க்கும் சுனில்குமார்(43), சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக சீண்டி தொல்லை கொடுத்து, இதை வெளியே சொன்னால் கொன்று விடுததாக மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

அன்று மாலை வீட்டிற்குச் சென்ற சிறுமி தன் தாயிடம் இதுபற்றி கூறியுள்ளார்.

இதையடுத்து தாய் காவல் நிலையத்திற்குச் சென்று புகாரளித்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து பள்ளிக்கு  வந்து விசாரித்த போலீஸார்,  அப்பள்ளியில் 13 ஆண்டுகளாக வேலைபார்க்கும் பியூன் சுனில்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.