1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 9 ஜூலை 2024 (16:01 IST)

ஹத்ராஸ் சம்பவத்திற்கு சாமியார் போலே பாபா காரணம் இல்லை.. விசாரணைக் குழு அறிக்கை

ஹத்ராஸ் கூட்ட நெரிசல் விவகாரத்திற்கு சாமியார் போலே பாபா என்ற நாராயண் சாகர் ஹரியின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் காவல்துறை நிர்வாகம் தான் காரணம் என அம்மாநில அரசிடம் சிறப்பு விசாரணைக் குழு  அறிக்கையை சமர்பித்துள்ளது.
 
அனுமதி வழங்கிய காவல்துறை அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் விதிமுறைகளை மீறி செயல்பட்டதே இந்த சம்பவத்திற்கு காரணம் என அறிக்கையில் விசாரணைக் குழுவினர் குறிப்பிட்டுள்ளனர். இந்த அறிக்கையில் சம்பவத்திற்கு காரணமானவர்கள் பட்டியலில் சாமியார் போலே பாபாவின் பெயர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் இந்த அறிக்கையில் நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வுகள் செய்யாமல் அனுமதி வழங்கி இருக்கிறார்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உரிய தரவுகளை காவல்துறை அதிகாரிகளிடம் கொடுக்காமல்  வழங்காமல் அனுமதி பெற்றனர், மேலும் விதிமுறைகளையும் மீறி செயல்பட்டு உள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 
மேலும் நிகழ்ச்சி முடிந்த பின்னர் பொதுமக்கள் வெளியேற போதிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை, நிகழ்ச்சி பின்னர் அதிகாரிகளிடம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தவறாக நடந்து கொண்டனர் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran