திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 21 ஏப்ரல் 2022 (19:18 IST)

பிரதமர் மோடியை விமர்சனம் செய்து டுவிட் போட்ட எம்.எல்.ஏ கைது!

arrest
பிரதமர் மோடியை விமர்சனம் செய்த எம்எல்ஏ ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பிரதமர் மோடியை விமர்சனம் செய்து டுவிட் செய்த குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானியை அசாம் மாநில போலீசார் கைது செய்துள்ளனர்
 
நேற்று இரவு 11 மணிக்கு அவரது இல்லத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர் இது குறித்து காவல்துறையினர் அளித்த விளக்கத்தில் குஜராத் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர் மேவானி, பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்ததால் கைது செய்யப்பட்டார் என்று கூறப்பட்டுள்ளது.
 
மேவானி எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டதை கண்டித்து குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்