வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 15 பிப்ரவரி 2021 (06:52 IST)

பொதுக்கூட்டத்தில் பேசியபோது மயங்கி விழுந்த முதல்வர்: பெரும் பரபரப்பு!

பொதுக்கூட்டத்தில் பேசியபோது மயங்கி விழுந்த முதல்வர்:
குஜராத் முதல்வர் விஜய் ரூபானி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
குஜராத் மாநிலத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் கங்கணம் கட்டிக்கொண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன
 
இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் குஜராத் முதல்வர் விஜய் ரூபாய் நிஜாம்புரா என்ற பகுதியில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்ததை அடுத்து அருகில் இருந்த காவலர்கள் அவரை தாங்கிப் பிடித்து நாற்காலியில் உட்கார வைத்தனர்
 
அதன்பின் தயாராக இருந்த மருத்துவர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்ததால், முதல்வர் ரூபானி இயல்பு நிலைக்கு திரும்பினார் என தகவல்கள் வெளிவந்தன. இருப்பினும் அவர் அந்த பொதுக் கூட்டத்தை ரத்து செய்துவிட்டு ஓய்வெடுக்க சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
குஜராத் முதல்வர் ரூபானி திடீரென மயங்கி விழுந்த செய்தி கேட்ட பிரதமர் மோடி உடனடியாக தொலைபேசி மூலம் அவரிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார்.