வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 7 டிசம்பர் 2019 (16:13 IST)

கலெக்‌ஷன் போதல... ஜிஎஸ்டி வரி விகிதத்தை உயர்த்தும் மத்திய அரசு?

ஜிஎஸ்டி அடிப்படை வரி விகிதத்தை உயர்த்தும் எண்ணத்தில் மத்திய அரசு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு 2 வருடங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், கடந்த பல மாதங்களாக வரும் வரி வசூல் எதிர்ப்பார்த்ததைவிட குறைவாக உள்ளதாம். 
 
இதனால் வரி வசூலை அதிகரிக்க ஜிஎஸ் அடிப்படை வரி விகிதங்களில் மாற்றங்களை கொண்டு வர மத்திய அரசி திட்டுமிட்டு வருவதக அதகவல் வெளியாகியுள்ளது. 
 
அதாவது, 5% உள்ள ஜிஎஸ் குறைந்தபட்ச வரி 9 - 10% அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இதை தவிர்த்து 12% வரி வரம்பில் உள்ள சுமார் 243 பொருட்களை 18% வரம்பிற்கு மாற்ற உள்ளதகாவும் கூறப்படுகிறது. 
 
இப்படி விலை உயர்த்தப்பட்டால் அரசுக்கு சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் வரி வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.