புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு திடீர் உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி!

சமீபத்தில் நடைபெற்ற முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக தங்கம் வென்ற வீரர் சோப்ராவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது
 
ஒலிம்பிக் போட்டிகள் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற நீரை சோப்ரா கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் இதனை அடுத்து அவருக்கு மருத்துவ சோதனை மேற்கொள்ளப்பட்ட போது கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது 
 
இந்த நிலையில் டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற 75வது சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்ற வீரர் சோப்ராவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது
 
மேலும் அவர் தற்போது காய்ச்சலுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது