1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 16 பிப்ரவரி 2023 (18:47 IST)

பிளாஸ்டிக் குப்பை கொடுத்தால் தங்க காசு: கிராம தலைவர் அதிரடி அறிவிப்பு!

plastic
பிளாஸ்டிக் குப்பைகளை கொடுத்தால் தங்க காசு கிடைக்கும் என ஜம்மு காஷ்மீர் மாநில கிராம தலைவர் அதிரடியாக அறிவித்துள்ளார் 
 
பிளாஸ்டிக் கழிவுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பல நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் ஜம்மு காஷ்மீரில் 2000 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை கொடுக்கும் மக்களுக்கு தங்க நாணயம் வழங்கப்படும் என ஜம்மு காஷ்மீர் மாநில கிராம தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
பிளாஸ்டிக் குப்பைகளை பொதுவெளியில் கொட்டுவதால் மண் வளம் கெட்டு போகிறது என்றும் இதனை தடுப்பதற்காக பிளாஸ்டிக் கழிவுகளுக்கு ஏற்ப தங்க காசுகளும் வெள்ளி காசுகளும் அளிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
 
Edited by Siva