திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 25 ஜனவரி 2023 (14:58 IST)

கோத்ரா கலவர வழக்கு; சாட்சியங்கள் இல்லை! – குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலை!

Gothra Riot
குஜராத்தில் கடந்த 2002 ல் நடைபெற்ற கோத்ரா கலவரத்தில் 17 பேரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

2002ம் ஆண்டில் குஜராத்தின் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவமும், அதை தொடர்ந்த படுகொலை சம்பவங்களும் நாட்டை ஸ்தம்பிக்க செய்வதாக அமைந்தன. இந்த சம்பவத்தின்போது பஞ்சமஹால் மாவட்டம் டெலோல் கிராமத்தில் நடைபெற்ற கலவரத்தில் 2 குழந்தைகள் உட்பட 17 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 22 பேரை கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

கடந்த 20 ஆண்டுகாலமாக நடந்து வந்த இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 8 பேர் விசாரணை காலத்திலேயே உயிரிழந்தனர். கொல்லப்பட்ட 17 பேரின் எலும்புகளை ஆற்றங்கரையோரம் போலீஸார் கண்டெடுத்த நிலையில் அவை அடையாளம் கண்டுபிடிக்கும் அளவை விட மோசமாக எரிந்திருந்ததாக கூறப்பட்டது.

இதனால் போதிய ஆதாரங்கள் இல்லாததை கருத்தில் கொண்டு குற்றம் சாட்டப்பட்ட 22 பேரையும் விடுதலை செய்வதாக அலகாபாத் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதில் 8 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் மீதம் உள்ள 14 பேரும் விடுதலை செய்யப்பட உள்ளனர்.

Edit by Prasanth.K