வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 10 ஜூலை 2017 (14:01 IST)

மாநில காங்கிரஸ் வாட்ஸ்அப் குரூப்பில் ஆபாச படம் அனுப்பிய பொதுச்செயலாளர்

கோவா மாநில காங்கிரஸ் வாட்ஸ்அப் குரூப்பில், முன்னாள் பொதுச்செயலாளரும் பத்திரிக்கை நிருபருமான சபேகோ என்பவர்  ஆபாச பட வீடியோவை பகிர்ந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


 

 
கோவா மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்ப ஒரு குரூப் உள்ளது. அதில் நிருபர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த குரூப் மூலம் அவர்களுக்கு செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பப்படுவது வழக்கம். 
 
திடீரென இந்த குரூப்பில் ஆபாச பட வீடியோ வந்துள்ளது. அந்த ஆபாச விடியோவை காங்கிரஸ் முன்னாள் பொதுச்செயலாளரும் பத்திரிக்கை புகைப்பட நிருபருமான சபேகோ என்பவர் அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது.
 
அதைத்தொடந்து அவர் வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுனில் கவுதாங்கே மன்னிப்பு கேட்டுக்கொண்டார். மேலும் இதுகுறித்து சபேகோ கூறியதாவது:-
 
இந்த வீடியோவை வேறு ஒரு நபர் எனக்கு அனுப்பி இருந்தார். அது தவறுதலாக குரூப்பில் சென்றுவிட்டது. இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.