திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 16 ஜனவரி 2023 (21:14 IST)

நாய்க்கு உணவு அளித்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்: அதிர்ச்சி சம்பவம்

accident
தெரு நாய்க்கு உணவளித்த இளம் பெண் மீது கார் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் அந்தப் பெண் பலத்த காயமடைந்த சம்பவம் சண்டிகரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
சண்டிகரில் வாசித்து வரும் இளம் பெண் தேஜஸ்விதா என்ற 25 பெண் தினசரி தனது வீட்டின் அருகே உள்ள தெரு நாய்களுக்கு உணவளிப்பது வழக்கம். 
 
அந்த வகையில் இன்று தேஜஸ்விதா தெரு நாய்களுக்கு உணவு அளித்து கொண்டிருந்தபோது திடீர் என வேகமாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த தேஜஸ்விதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சை செய்தனர்
 
இந்த நிலையில் தற்போது அவர் உடல்நிலை தேறி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தேஜஸ்விதா மீது மோதிய காரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர் 
 
Edited by Mahendran