1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (20:45 IST)

இனி போர்க்களத்தில் தான் பேச்சுவார்த்தை: கவுதம் காம்பீர்

பாகிஸ்தான் நாட்டின் தீவிரவாத அமைப்பு நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 வீரர்களை இந்தியா இழந்துள்ள நிலையில் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க மத்திய அரசும், இந்திய ராணுவமும் தயாராகி வருகிறது. இந்த தாக்குதலால் இந்தியா முழுவதிலும் உள்ள மக்கள் கடுங்கோபத்தில் இருப்பதால் உடனடியாக ஒரு சர்ஜிக்கல் தாக்குதலை நடத்த வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருப்பதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் இந்த தாக்குதல் குறித்து தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்த பிரபல கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பிர், 'இனியும் பிரிவினைவாதிகளுடனும் பாகிஸ்தானுடனும் பேசுவோம். ஆனால் இந்த முறை பேச்சுவார்த்தை மேஜையில் இருக்காது, போர்க்களத்தில்தான் இருக்க வேண்டும். பொறுத்தது போதும். பொங்கி எழவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
 
கவுதம் காம்பீரின் இந்த டுவீட்டுக்கு ஆயிரக்கணக்கான  லைக்ஸ்களும் ஷேர்களும் கமெண்டுக்களும் குவிந்து வருகிறது. இதில் இருந்தே மக்கள் எந்த அளவுக்கு ஆத்திரத்தில் உள்ளனர் என்பது தெரியவருகிறது.