ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: திங்கள், 15 மே 2017 (10:08 IST)

நிர்பயாவை விட கொடூரம்: வேலைக்கு சென்ற பெண்ணை 7 பேர் பலாத்காரம் செய்து கார் ஏற்றி கொன்ற கொடூரம்!

நிர்பயாவை விட கொடூரம்: வேலைக்கு சென்ற பெண்ணை 7 பேர் பலாத்காரம் செய்து கார் ஏற்றி கொன்ற கொடூரம்!

டெல்லியில் மருத்துவக்கல்லூரி மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 4 பேருக்கு மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உறுதி செய்தது.


 
 
நாட்டு மக்களிடம் நிர்பயா சம்பவம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் மீண்டும் அதனை மிஞ்சும் அளவில் ஒரு சம்பவம் ஹரியானா மாநிலத்தில் நடந்துள்ளது. கடந்த 9-ஆம் தேதி 23 வயதான இளம்பெண் ஒருவர் வேலைக்கு சென்றுள்ளார்.
 
வேலைக்கு சென்ற அந்த இளம்பெண்ணை 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று கடத்தில் கொடூரமாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதன் பின்னர் அந்த பெண்ணின் உடலை சிதைத்து கார் ஏற்றி கொடூரமாக கொலை செய்து வக்கிரத்தை அரங்கேற்றியுள்ளனர்.
 
பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள் அளித்த தகவலின் அடிப்படையிலேயே அவர் அடையாளம் காணப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. நிர்பயா சம்பவத்தையே மிஞ்சும் அளவுக்கு ஹரியானாவில் நடந்த இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.