வீடு தேடி கொரோனா நோயாளிகளூக்கு இலவச சிகிச்சை செய்த டாக்டர்: குவியும் பாராட்டு!
வீடு தேடி கொரோனா நோயாளிகளூக்கு இலவச சிகிச்சை செய்த டாக்டர்: குவியும் பாராட்டு!
கொரோனா வைரஸ் பரவல் நேரத்தில் டாக்டர்கள் பகல் கொள்ளை அடிப்பதாகவும், மருத்துவமனைகள் ஏழை எளிய நடுத்தர மக்களிடம் உள்ள பணத்தை முழுவதும் கறந்து கொள்வதாகவும் குற்றச்சாட்டுக்கள் இருந்து வருகின்றன. ஆனால் பெங்களூரை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தன்னுடைய சொந்த காரில் நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று தினமும் இலவசமாக சிகிச்சை அளித்து வரும் தகவல் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பெங்களூரை சேர்ந்த மருத்துவர் சுனில்குமார். இவர் கடந்த சில நாட்களாக கொரோனா நோயாளிகளை அவர்களுடைய வீடுகளுக்கே தன்னுடைய சொந்த காரில் சென்று சிகிச்சை அளித்து வருகிறார். மேலும் அவருடைய காரை நடமாடும் மருத்துவமனையாக மாற்றி கொரோனா நோயாளிகள் மற்றும் கொரோனா பாதிப்பு இல்லாதவர்களுக்கும் வீடு தேடி சென்று சிகிச்சை செய்து வருகிறார்
இவருடைய சிகிச்சையால் பல கொரோனா நோயாளிகள் ஒரு பைசா செலவில்லாமல் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தன்னலமற்ற மருத்துவ சேவை செய்து வரும் டாக்டர் சுனில் குமார் அவர்களுக்கு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.