ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 11 ஜனவரி 2024 (11:43 IST)

டிராபிக் பிரச்சனை இல்லை.. பெட்ரோல் தேவையில்லை.. இந்தியாவில் விரைவில் பறக்கும் கார்..!

இந்தியாவில் விரைவில் பறக்கும் கார் தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
குஜராத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு தற்போது நடந்து வரும் நிலையில் இந்த மாநாட்டில் ஜப்பான் நிறுவனம் காட்சிப்படுத்திய பறக்கும் கார் அனைவரையும் கவர்ந்துள்ளது.  
 
மூன்று சீட்டுகள் கொண்ட இந்த காரில் இரண்டு பயணிகள் மற்றும் ஒரு டிரைவர் என மூன்று பேர் பயணம் செய்யலாம். அலுமினியம் உலகத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பறக்கும் கார்கள் 1400 கிலோ எடை இருக்கும் என்றும் மணிக்கு 100 கிலோ மீட்டர் பறக்கும் என்றும் கூறப்படுகிறது. 
 
இதற்கு பெட்ரோல் தேவை இல்லை. இது ஒரு மின்சார கார் என்பதால் ஒருமுறை சார்ஜ் செய்து 15 கிலோ மீட்டர் வரை செய்ய செல்லலாம்.  தொலைதூர பயணங்களுக்கு ஏற்றது இல்லை என்றாலும் குறுகிய தூரத்தில் செல்வதற்கு இந்த காரை பயன்படுத்தலாம் என்றும்  இந்த கார் போக்குவரத்து நெருக்கடியான நகரங்களில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
 
 ஜப்பானில் சேர்ந்த பிரபல கார் உற்பத்தி நிறுவனமான சுசுகி நிறுவனத்துடன் சேர்ந்து ஸ்கை என்ற நிறுவனம் இந்த காரை தயாரித்து இந்தியாவில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
 
Edited by Mahendran