செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 27 நவம்பர் 2022 (17:44 IST)

ஹவுரா எஸ்க்பிரஸ் ரயிலில் திடீர் தீ விபத்து: அவசரமாக இறக்கப்பட்ட பயணிகள்!

howrah
ஹவுரா எஸ்க்பிரஸ் ரயிலில் திடீர் தீ விபத்து: அவசரமாக இறக்கப்பட்ட பயணிகள்!
ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பயணிகள் அவசர அவசரமாக இறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன
 
கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து ஹவுரா சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் ஆந்திர மாநிலத்தில் குப்பம் என்ற பகுதிக்கு சென்று கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்தது 
 
இதனை அடுத்து பல பயணிகள் அலறிய நிலையில் உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. பின்னர் பயணிகள் அனைவரும் பாதுகாப்புடன் இறக்கப்பட்டனர். தீப்பிடித்த ரயிலின் பெட்டியில் இருந்தவர்கள் இருந்தவர்களை போலீசார் முதலில் இறக்க உதவி செய்தனர்
 
இதனையடுத்து உடனடியாக தீப்பிடித்த ரயிலை அணைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பயணிகள் யாருக்கும் எந்தவித காயமும் இல்லை என முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன
 
Edited by Siva