திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (18:14 IST)

சினிமா படப்பிடிப்பு அரங்கில் தீ விபத்து....

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையிலுள்ள சினிமா படப்பிடிப்பு அரங்கில் திடீரென்று தீ பிரவியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய சினிமாவில் மும்பயில்தான் சினிமா படத்தின் ஷூட்டிங் நடத்துவதற்கான அனைத்து விதமான சகல வசதிகளும், படப்பிடிப்பு அரங்கங்களும் நிறைந்துள்ளன.

எனவே பாலிவுட் உள்ளிட்ட  அனைத்து மொழிப்படங்களும் இங்கு ஷூட்டிங் நடத்தப்படுவது வழக்கம்.

இந்நிலையில், மும்பை அருகேயுள்ள சினிமா படப்பிடிப்பு அரங்கில் தீ பரவி கொளுந்துவிட்டு எரிகிறது. இத்தீயை அணைக்க சுமார் 8 தீயணைப்பு வட்டிகள் விரைந்து சென்று அணைத்துவருகின்றனர்.

இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது.இத்தீவிபத்தில் யாருக்கும் காயமில்லை எனத் தெரிகிறது.