மாமியாருடன் உல்லாசம்: மருமகனை போட்டுத்தள்ளிய மாமனார்
டெல்லியில் மாமியாருடன் தகாத உறவில் ஈடுபட்ட மருமகனை மாமனார் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் கஞ்சம் பகுதியை சேர்ந்த பிஜய்குமார், டெல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் தன்னுடன் பணிபுரியும் பெண்ணுடன் டிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் ஒரே பிளாட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் பிஜய்குமாரின் மருமகன் முறையான ஜெய் என்பவர் வேலை விஷயமாக டெல்லிக்கு வந்தார். அவர் பிஜய்யின் பிளாட்டில் வசித்து வந்தார். ஜெய்க்கும் பிஜய்குமாரின் காதலிக்கும் கனெக்ஷன் ஏற்பட்டு இருவரும் அவ்வப்போது உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இதனையறிந்து ஆத்திரமடைந்த பிஜய், ஜெய்யை கொலை செய்து அவரது பிணத்தை புதைத்துள்ளார். இந்த கொலை குறித்து விசாரித்து வந்த போலீஸார், நீண்ட தேடுதல் வேட்டைக்கு பின்னர் பிஜய்யை கைது செய்துள்ளனர்.