வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 18 டிசம்பர் 2022 (15:38 IST)

இப்ப இதான் ட்ரெண்டு.. மருமகனுக்கு புல்டோசர் தந்த மாமனார்! – உத்தர பிரதேசத்தில் நூதனம்!

bulldozer
உத்தர பிரதேசத்தில் திருமணத்திற்கு வரதட்சணையாக புல்டோசர் வாங்கி தந்த சம்பவம் வைரலாகியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. சமீப காலமாக குற்ற செயல்களில் ஈடுபடுவோர் வீடுகளை புல்டோசரால் இடித்து தள்ளும் சம்பவங்கள் உத்தர பிரதேசத்தில் அதிகரித்துள்ளது. இதையொட்டி, யோகி ஆதித்யநாத்தையும், புல்டோசரையும் மையப்படுத்தி மீம்களும் உலாவின.

இந்த புல்டோசரை ட்ரெண்டை திருமணம் வரை கொண்டு சென்றுள்ளார் ஒருவர். உத்தர பிரதேசத்தின் ஹமீர்பூர் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி பரசுராம் பிரஜாபதி. இவர் தனது மகளுக்கு சமீபத்தில் திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணத்திற்கு வரதட்சணையாக பொதுவாக கார் வழங்குவார்கள். ஆனால் பிரஜாபதி வித்தியாசமாக புல்டோசரை வாங்கி வரதட்சணையாக வழங்கியுள்ளார்.

இந்த புல்டோசர் புகைப்படங்கள் மற்றும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Edit By Prasanth.K