மகன் ஓரினச்சேர்க்கையாளர் என அறிந்த பெற்றோர் – அடித்துத் துன்புறுத்திக் கொலை மிரட்டல் !
மேற்கு வங்கத்தில் தான் ஓரினச்சேர்க்கையாளர் எனத் தெரிவித்த மகனை குடும்பத்தினர் அடித்துத் துன்புறுத்தி அவருக்கும் அவரது காதலருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
மேற்கு வங்கத்தின் பராசத் பகுதியைச் சேர்ந்த அந்த வாலிபர் தான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என குடும்பத்தில் அறிவித்துள்ளார். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த அவரது பெற்றோர் அவரை அடித்துத் தாக்கியுள்ளனர். மேலும் அவருக்குப் பெண் பார்த்து கல்யாணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். அதற்கு அவர் மறுக்கவே அவரையும் அவரது காதலரையும் கொலை செய்வோம் என மிரட்டியுள்ளனர்.
இதையடுத்து காதலர்கள் இருவரும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர். இந்த செய்தி ஊடகங்களில் வெளியானதை அடுத்து எல்ஜிபிடி அமைப்பைச் சேர்ந்தவர்கள் அவர்கள் இருவருக்கும் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.