திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : செவ்வாய், 19 மார்ச் 2024 (20:24 IST)

விவசாய பணிகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு - காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி

congress
18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்  அறிவித்தார்.
 
அதன்படி தேர்தல் விதிகள்  நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது. 
 
தற்போது காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட பல கட்சிகள் பாஜகவுக்கு எதிரான இந்தியா கூட்டணியை உருவாக்கி ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
 
காங்கிரஸ் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், 
 
ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் 2 வது கட்ட  வேட்பாளர் பட்டியல் வெளியானது இதில், முக்கிய வேட்பாளர்கள் யார் எண்ற தகவல் இருந்தது.
 
மக்களவை தேர்தலையொட்டி, உழவர் நீதி, இளைஞர் நீதி, மகளிர் நீதி, உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தது. 
 
அதில், ஏழை குடும்பத்து பெண்களுக்கு ஆண்டிற்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை  மத்திய அரசில் காலியாக உள்ள 30 லட்சம் பணிகள் நிரப்பப்படும் என்று அறிவித்திருந்தது.
 
சில தினங்களுக்கு முன் தொழிலாளர் நீதி என்ற பெயரில் தொழிலாளர்களுக்கு காங்கிரஸ் வாக்குறுதிகள் அறிவித்தது.
 
இந்த நிலையில், இன்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் தேர்தல் வாக்குறுதியை அறிவித்துள்ளார்.
 
அதில், 50 சதவீதம் இட ஒதுக்கீடு உச்சவரம்பை நீக்க அரசியல் சாசன சட்டம் இயற்றப்படும்.
 
சாதிவாரி கணக்கெடுப்பு எஸ்.சி. எஸ்டி பிரிவினக்கு தனி பட்ஜெட் போடப்படும்.
 
இந்தியா கூட்டனி ஆட்சிமைத்த உடன் 30 லட்சம் இளைஞர்களுக்கு அரசுப் பணிகளில் வேலைவாய்பு அளிக்கப்படும்.
 
இளைஞர்களுக்கான ஸ்டார்ட் அப் திட்டத்திற்கு ரூ.5000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச வருவாய் சட்டம் கொண்டு வரப்படும்.
 
பெண்களுக்கு அரசுப் பணிகளில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
 
விவசாய பணிகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.