புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 19 ஜனவரி 2024 (13:59 IST)

சமூக வலைதளங்களில் 2k கிட்ஸின் ஆதிக்கம்

social media
இந்தியாவில் சமூக வலைதளங்கள் பயன்படுத்துவதில் 2 k கிட்ஸின் ஆதிக்கம் இருப்பதாக தகவல் வெளியாகிறது.
 
இன்றைய உலகில் சமூக வலைதளங்களில் தாக்கம் அதிகரித்துள்ளது. எனவே எல்லோர் வீட்டிலும் ஸ்மார்ட் போன் இருக்கும் சூழல் உள்ளது. எனவே ஸ்மார்ட் போன் இருந்தால் அவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்தும் சூழலும் இருக்கிறது.

அந்த வகையில், இன்றைக்கு பள்ளி மாணவர்கள் முதல் பெரியோர் வரை எல்லோரும் சமூக வலைதளங்களில் கணக்குகள் தொடங்கி அதில் பயனராக உள்ளனர்.

இந்த நிலையில், இந்தியாவில் சமூக வலைதளங்கள் பயன்படுத்துவதில் 2 k கிட்ஸின் ஆதிக்கம் இருப்பதாக தகவல் வெளியாகிறது.

இதுகுறித்து ASER 2023 ஆய்வறிக்கையில், இந்தியாவில், 14 வயது  முதல் 18 வயது வரை 90சதவீதம் பேர் சமூக வலைதளங்களை பயன்படுத்துகின்றனர். அதில், ஆண்கள் 44சதவீதம் பேரும் பெண்கள் 20 சதவீதம் பேரும் சொந்தமாக செல்போன் வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும், இதில், 80 சதவீதம் பேர் படம் பார்ப்பதற்காகவும், பாடல் கேட்பதற்காகவும் செல்போனை பயன்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.