செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 18 ஏப்ரல் 2024 (08:19 IST)

காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வாக்கு சேகரிக்கும் திமுக.. அதிர்ச்சியில் ராகுல் காந்தி..!

தமிழ்நாட்டில் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணியில் இருக்கும் நிலையில் பக்கத்து மாநிலமான கேரளாவில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக திமுகவினர் வாக்கு சேகரித்து வருவதாகவும் அவர்கள் இடதுசாரி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருவதாகவும் கூறப்படுவதால் ராகுல் காந்தி அதிர்ச்சி அடைந்திருப்பதாக புறப்படுகிறது.

சமீபத்தில் ராகுல் காந்தி தமிழகத்திற்கு வந்தபோது தனது சகோதரர் ராகுல் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் கூறினார் என்பதும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி இனிப்பு வாங்கி கொடுத்தார் என்பதும் தெரிந்தது

இந்த நிலையில் தமிழகத்தில் காங்கிரஸ் - திமுக கூட்டணி சுமுகமாக இருக்கும் நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் திமுகவினர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இடது கம்யூனிஸ்ட் வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்து வருவது ராகுல் காந்திக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் திமுக காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் கட்சிகள் இருந்தாலும் கேரளாவில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் நேருக்கு நேர் போட்டி இடுகின்றனர்.

 இந்த நிலையில் கேரளாவில் உள்ள இடுக்கி தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக திமுகவினர் பேனர்களை வைத்திருப்பதாகவும் இடதுசாரி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருவதாகவும் கூறப்படும் செய்தி அறிந்து ராகுல் காந்தி அதிர்ச்சி அடைவது இருப்பதாக கூறப்படுகிறது

 தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி சமூகமாக இருந்தாலும் பல மாநிலங்களில் இந்தியா கூட்டணி முரண்பாடாக இருப்பதாகவே இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Edited by Siva