விரைவில் டிஜிட்டல் வாக்காளர் அட்டை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

விரைவில் டிஜிட்டல் வாக்காளர் அட்டை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
siva| Last Updated: திங்கள், 25 ஜனவரி 2021 (08:05 IST)
விரைவில் டிஜிட்டல் வாக்காளர் அட்டை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
நாட்டின் எந்தவொரு வாக்குச்சாவடியில் இருந்தும் எந்தவொரு குடிமகனும் எந்த ஒரு தொகுதிக்கும் வாக்களிக்கலாம் என்ற டிஜிட்டல் வாக்களிக்கும் முறை விரைவில் வரப்போவதாகவும் இதுகுறித்து தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

விரைவில் நாட்டில் மின்னணு வாக்காளர் அடையாள அட்டை அனைவருக்கும் வழங்கப்படும் என்றும் இதன் மூலம் நாட்டின் எந்த ஒரு வாக்குச்சாவடியில் இருந்தும் வாக்காளர் வாக்கு அளிக்கும் வாக்குச்சாவடிக்கு வாக்குகளை மாற்ற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதற்கான ஒத்திகைகள் தற்போது நடைபெற்று வருவதாக தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அவர்கள் தெரிவித்துள்ளார். தேசிய வாக்காளர் தினத்தை ஒட்டி பேசிய சுனில் அரோரா மேலும் சில திட்டங்களை தேர்தல் ஆணையம் வைத்திருப்பதாகவும் அது குறித்து விரைவில் விளக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்
சென்னை ஐஐடி உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்களின் உதவியால் இந்த நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேர்தல் ஆணையத்தில் பல புதுமைகளை புகுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்


இதில் மேலும் படிக்கவும் :