ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 24 ஜூன் 2019 (17:08 IST)

கோடீஸ்வரர் வீட்டுத் திருமணத்தால் ’தர்ம சங்கட்டம்’ ...சிரமத்தில் பணியாளர்கள்

உத்தராகண்ட் மாநிலம் ஆலி மலை அடிவாரத்தில் தொழில் அதிபர் குப்தா குடும்பத்தினரின் திருமண நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இதில் பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இப்போது இதில் என்ன பிரச்சனை என்னவென்றால் திருமணத்தினால் குப்பைகள் குவிந்துள்ளது. இதை அள்ள துப்புறவு பணியாளர்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவில் வசித்துவரும் இந்திய தொழிலதிபரான அஜய்குப்தாவின் மகன் திருமணம், உத்தராகண்ட் மாநிலம், ஆலிமலை அடிவாரத்தில் மிகப்பெரிய அரங்குகள் அமைத்து கோலாகலமாக விழா போல் திருமணம் நடைபெற்றது.
 
இந்நிலையில் இந்த திருமணத்திற்கு பாலிவுட் நடிகர், நடிகைகள், முக்கிய பிரமுகர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். 5 நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சிகள் தற்போது முடிவடைந்துள்ளன. ஆனால் அப்பகுதியில் குப்பைகள் அதிக அளவில் உள்ளதால் அதை அள்ளி அப்புறப்படுத்த துப்புறவு பணியாளர்கள் திணறுவருகிறார்கல் எனவும் செய்திகள் வெளியாகிறது.