திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 25 நவம்பர் 2021 (16:10 IST)

பிணவறையில் இருந்தவர் உயிருடன் வந்தார்; சிகிச்சைக்கு பின் மரணம்! – டெல்லியில் ஆச்சர்ய சம்பவம்!

விபத்து காரணமாக உயிரிழந்ததாக கருதப்பட்ட நபர் உயிருடன் இருந்த நிலையில் மீண்டும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு டெல்லியில் உள்ள மொரதாபாத்தை சேர்ந்த ஸ்ரீகேஷ் குமார் என்பவர் கடந்த நவம்பர் 18 அன்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானார். அங்கு அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்த நிலையில் அவரை பிரேத பரிசோதனை அறையில் வைத்துள்ளனர்.

சுமார் 7 மணி நேரம் அவர் பிணவறையில் இருந்த நிலையில் அவரது உடலை காண வந்த அவரது நண்பர்கள் அவர் உடல் அசைவதை கண்டு மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளனர். உடனடியாக அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து 5 நாட்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.