1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 23 ஜூலை 2023 (11:34 IST)

மணிப்பூருக்குள் என்னை அனுமதிக்க மறுக்கிறார்கள்: மகளிர் ஆணையத் தலைவி பேட்டி..!

Manipur
மணிப்பூருக்குள் என்னை அனுமதிக்க மறுக்கிறார்கள் என டெல்லி மகளிர் ஆணைய தலைவி பேட்டி அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
மணிப்பூரில் இரண்டு பெண்கள் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தின் வீடியோ சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் அதிர்ச்சி அடைய வைத்தது. 
 
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் என்றும் நாடு முழுவதும் குரல் எழுப்பப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில்  மணிப்பூரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற தனது கோரிக்கையை மணிப்பூர் மாநில அரசு நிராகரித்துவிட்டது என டெல்லி மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால் தெரிவித்துள்ளார். 
 
சட்டம் ஒழுங்கு சரியில்லை எனை கூறி என்னை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் என்றும் நான் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவத்தான் செய்கிறேன் என்றும் அவர்கள் என்னை அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva