புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 16 செப்டம்பர் 2021 (14:42 IST)

121 ஆண்டுகள் இல்லாத அளவு மழை! – டெல்லிக்கு ஆரஞ்சு அலர்ட்!

இந்திய தலைநகர் டெல்லியில் கனமழை பெய்ய உள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.

இந்திய தலைநகர் டெல்லியில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில் மேலும் சில நாட்களுக்கு டெல்லியில் கனமழை மற்றும் 20 கி.மீ முதல் 40 கி.மீ வரை காற்று வீசும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். மேலும் கடந்த 121 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பெய்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.