1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 11 ஜூன் 2020 (17:50 IST)

டெல்லியில் கொரோனா உயிரிழப்பு எவ்வளவு? இடிக்கும் கணக்கு!!

டெல்லியில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையால் சர்ச்சை வெடித்துள்ளது.
 
நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதோடு இறப்பு விகிதமும் அதிகரித்து வருகிறது. சென்னை மாநகருக்குட்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நிகழும் உயிரிழப்புகள் குறித்து மின்னஞ்சல் வாயிலாக மாநகராட்சிக்கு தெரிவிக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது.  
 
இந்நிலையில், 236 நபர்களின் மரணம் விவரங்கள் இதுவரை தெரிவிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் இதனை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மறுத்துள்ளார். இதேபோல டெல்லியிலும் மரணங்கள் மறைக்கப்படுவதாக சர்ச்சைகள் வெடித்துள்ளது. 
 
டெல்லியில் கொரோனாவுக்கு 984 பேர் உயிரிழந்ததாக அரசு கூறிய நிலையில் 2,098 சடலங்கள் அடக்கம் என மாநகராட்சி கூறியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 
 
மாநகராட்சியின் கணக்கு படி டெல்லி தெற்கு மாநகராட்சியில் 1.080, வடக்கில் 976, கிழக்கில் 42 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 
 
அரசு தரப்பு எண்ணிக்கைக்கும் மாநகராட்சியின் எண்ணிக்கைக்கும் பெரிய அளவில் மாறுதல்கள் இருப்பதால் இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.