திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: சனி, 14 அக்டோபர் 2017 (11:36 IST)

டெல்லி முதல்வரிடம் திருடப்பட்ட கார் உபி மாநிலம் சென்றது எப்படி?

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் டெல்லி தலைமைச்செயலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அந்த காரை மர்ம மனிதர் ஒருவர் திருடி சென்றுவிட்டார்



 
 
முதலமைச்சர் காரை கண்டுபிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படை கடந்த இரண்டு நாட்களாக திருடப்பட்ட காரை சல்லடை போட்டு தேடி வந்த நிலையில் இன்று அந்த கார் உத்தரபிரதேச மாநிலம் காசியபாத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
 
டெல்லியில் திருடப்பட்ட கார் உபி மாநிலத்திற்கு வந்தது எப்படி? அதை திருடியது யார்? என்று போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றானர். டெல்லி காவல்துறை துணைநிலை ஆளுனரின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதும், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதும் தெரிந்ததே.