திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 10 ஆகஸ்ட் 2023 (07:49 IST)

தந்தையின் மனைவியாக 10 ஆண்டுகளாக நடித்த மகள் கைது.. அதிர்ச்சி தகவல்..!

இறந்த தந்தையின் மனைவியாக 10 ஆண்டுகள் அவருடைய மகள் நடித்து ஓய்வூதியம் பெற்று வந்ததாக கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  
 
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில்  வருவாய் துறை அலுவலகத்தில் பணியாற்றியவர் வஜாஹத் உல்லா கான். இவர் கடந்த ஜனவரி மாதம் காலமான நிலையில் அவருக்கு முன்பே அவருடைய மனைவி சபியா பேகம் இறந்துவிட்டதாக தெரிகிறது. 
 
ஆனால் அவருடைய மகள் பர்வேஸ் என்பவர் 10 ஆண்டுகளாக அவருடைய மனைவி என்று கூறி ஓய்வூதியம் பெற்று வந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  போலி ஆவணங்கள் கொடுத்து சட்ட விரோதமாக ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் பெற்று வந்ததை அடுத்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்
 
போலி ஆவணங்கள் தயாரித்தல் மோசடி செய்தல் உள்பட பல்வேறு பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  இதுவரை அவர் அரசிடம் இருந்து 12 லட்சத்திற்கும் மேல் ஓய்வூதியம் பெற்று வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva