81 கோடி இந்தியர்களின் தரவுகள் கசிவு...சிபிஐ விசாரணை
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சர்வர்களில் இருந்து 81 கோடி பேரின் தரவுகள் டார்க் வெப் தளத்தில் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சர்வர்களில் இருந்து 81 கோடி பேரின் தரவுகள் டார்க் வெப் தளத்தில் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, கொரோனா பெருந்தொற்றுப் பரவலின்போது, மக்கள் பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் அளித்த பெயர், தொலைபேசி எண் மற்றும் முகவரியுடன் கூடிய ஆதார் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கசிந்துள்ளன.
இதுதொடர்பாக சிபிஐ விராணையைத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகிறது.