முதலைகளை ஏற்றி சென்ற லாரி விபத்து.. தப்பித்து சென்ற முதலைகளால் பொதுமக்கள் அச்சம்..!
முதலைகளை ஏற்றி சென்ற லாரி விபத்துக்குள்ளானதை அடுத்து, அதிலிருந்து முதலைகள் தப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையில், முதலைகளை ஏற்றி சென்ற லாரி திடீரென சாலை ஓரத்தில் உள்ள தடுப்பில் மோதியதால் விபத்துக்குள்ளானது. இதனை அடுத்து, இந்த லாரியில் இருந்த 8 முதலைகள் லாரியிலிருந்து வெளியேறியதாகவும், இதை கண்ட லாரி டிரைவர் போலீசுக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
போலீசாரும் வனத்துறையினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். தப்பிச் சென்ற முதலைகளால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படாதவாறு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு, இரண்டு முதலைகள் மட்டும் மீட்கப்பட்டதாகவும், மற்ற முதலைகளை பிடிக்கும் பணியில் போலீசார் மற்றும் வனத்துறையினர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Mahendran