வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 23 மார்ச் 2020 (18:02 IST)

கொரோனாவை கெட்ட வார்த்தையாக்கிய இந்தியர்கள்: அவமதிக்கப்பட்ட இளம்பெண்!

மணிப்பூரை சேர்ந்த இளம் பெண் ஒருவரை கொரோனா என அழைத்து அவமதித்துள்ள சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. 
 
டெல்லியில் வசித்து வரும் மணிப்பூரை சேர்ந்த இளம் பெண் விஜய் நகர் பகுதியில் சாலையில் நடந்து சென்ற போது  அந்த பெண்ணை உருவ கேலி செய்ததுடன் கொரோனா என அழைத்து அந்த பெண் மீது புகையிலை எச்சிலை துப்பி அவமானப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 
 
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் 7 பேர் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.