ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 24 ஜனவரி 2020 (07:59 IST)

மனைவியிடம் அத்துமீறிய கணவன் ! நீதிமன்றம் அளித்த தீர்ப்பு !

பெண் ஒருவர் தனது கணவர் தன்னை பலாத்காரம் செய்ததாக தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் திருமனத்துக்குப் பிறகு தன்னுடைய கணவர் ஒரு திருடன் என்பதைக் கண்டுபிடித்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் கணவரைப் பிரிந்து தனியாக டெல்லியில் சென்று வாழ்ந்துள்ளார். டெல்லிக்கு சென்று தனது மனைவியை சமாதானப் படுத்திய அவர் இனிமேல் திருடமாட்டேன் என சத்தியம் செய்து அவரோடு வாழ ஆரம்பித்துள்ளார்.

ஆனாலும் சில மாதங்களில் வீட்டில் இருந்த 2 லட்ச ரூபாயைத் திருடிக்கொண்டு சென்றுள்ளார். இது சம்மந்தமாக போலிஸ் அவரைக் கைது செய்துள்ளது. அந்த வழக்கில் இருந்து ஜாமீனில் வந்த அவர் மனைவியின் வீட்டுக்கு சென்று அவரிடம் அத்துமீறி நடந்துகொண்டுள்ளார்.இதையடுத்து அந்த பெண் கணவர் தன்னை பலாத்காரம் செய்துவிட்டதாக போலீஸில் புகார் கொடுத்தார்.

இது சம்மந்தமான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த வேளையில் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில் ’ 2016-ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி வல்லுறவு சம்பவம் நடந்ததாக பாதிக்கப்பட்ட பெண் சொல்லியுள்ளார். ஆனால் அதற்கு ஒரு வருடம் முன்பாக அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. அதனால் இந்த வழக்கில் பாலியல் பலாத்கார பிரிவின் கீழ் தண்டனைக் கொடுக்க முடியாது’ எனக் கூறியுள்ளனர்.