அவதூறு வழக்கு: முன்னாள் முதல்வருக்கு ரூ.10 லட்சம் அபராதம்!
அவதூறு வழக்கில் கேரள மாநில முன்னாள் முதலமைச்சருக்கு 10 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
கேரளாவில் சோலார் பேனல் எனப்படும் மோசடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் இந்த வழக்கில் சரிதா நாயர் என்பவர் கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த வழக்கு குறித்து முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் அளித்த பேட்டியில் முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது
இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியான நிலையில் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் 10 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக செலுத்த வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வருக்கு 10 லட்ச ரூபாய்க்கு மேல் அபராதம் விதிக்கப்பட்ட தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது