காதலர்கள் ரகசிய சந்திப்பு: வீடோடு கொளுத்திய குடும்பத்தார்!!
உத்திரபிரதேசத்தில் இளம் காதல் ஜோடி எரித்து கொள்ளப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தை சேர்ந்த போலா மற்றும் பிரிங்கா காதலித்து வந்துள்ளனர், இந்நிலையில் காதலியை சந்திக்க ரகசியமாக காதலன் சம்பவதினத்தன்று வந்துள்ளான். ஆனால் இதை பிரியங்காவின் குடும்பத்தார் அறிந்துக்கொண்டனர்.
பின்னர் இருவரும் இருந்த அறையை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு மண்ணென்ணெயை ஊற்றி தீ வைத்துவிட்டனர். இதில் காதலர்கள் துடிதுடித்து இறந்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து பிரியங்காவின் குடும்பத்தாரை போலீஸார் கைது செய்துள்ளனர். காதலர்கள் ஒரு சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்த போதிலு இந்த கொடூர சம்பவம் அரங்கேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.